என்னம்மா வாழ்த்து.
அம்மா ஒன்னம்மா சக்தியே!
அய்யன் தொட்டன் பத்தினியே!
உழைக்கும் நலத்தின் ஆவலே!
தழைக்கும் குலத்தின் காவலே
ஆயர் பாடித் தெய்வமே!
சேயர் கூடி துதித்தோமே!
மாயன் லட்சுமி அம்சமே!
வாழச் செய்யுன் வம்சமே!
அனுப்பர் வாழும் இடமெல்லாம்
இருப்பாய் ஆளும் ஒன்னம்மா!
கம்மாக் கரையில் கோவிலே!
அம்மா உன்திசை கிழக்கிலே!
இலந்தை முள்ளுக் கோட்டையே!
எழுப்பக் கேட்ட தேவியே!
வளரும் தமிழ் நாட்டையே
வாழ்வித்த காவிரியே!
புல்லாங் குழல் மீட்டுந் தொட்டன்.
புதுப்புனலும் காட்டும் அய்யன்
புதுப்புனலும் காட்டும் அய்யன்
குடகு மலைத் தேவி துணை
நடந்த வரவு நிரம்பும்அணை.
நடந்த வரவு நிரம்பும்அணை.
நெருப்பில் பிறந்த தேவியே!
நீதி காக்குங் கோவியே!
வாடும் பயிரும் விளையவே
ஓடி வருவாய் காவிரியே!
உறுமிமேளம் தாளம் கொட்டி,
உனதுபுகழே கானங் கட்டி
உருக நாளும் கெஞ்சுகிறோம்.
வருக அருள்க ஒன்னம்மா!
பாட்டாளி அனுப்பர் குலம்
பசிவலி மறந்து நலம்
கூட்டுக் குடி கூடி இனம்
குதுகலமாய் வாழ வேணும்.
அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா ஒன்னைப் பாடுவோம்
அவள் விடுத்த சபதத்தை
நகல் எடுத்து வாழுவோம்.
அனுப்பர் எல்லாம் கூடுவோம்.
அம்மா ஒன்னைப் பாடுவோம்
அவள் விடுத்த சபதத்தை
நகல் எடுத்து வாழுவோம்.
கொ.பெ.பி.அய்யா

No comments:
Post a Comment